வாகன விபத்தில் தாய், இரு பெண் பிள்ளைகள் பலி | தினகரன்

வாகன விபத்தில் தாய், இரு பெண் பிள்ளைகள் பலி

வாகன விபத்தில் தாயும், இரு பெண் பிள்ளைகள் பலி-Accident at Pottuvil Mother-2 Child Dead

 

வாகன விபத்தில் தாயும், இரு பெண் பிள்ளைகள் பலி-Accident at Pottuvil Mother-2 Child Deadபொத்துவில், குஞ்சான் ஓடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24) இரவு அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் இவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியின் எரிபொருள் தீர்ந்துள்ளது.

இந்நிலையில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் செல்வதற்காக வீதியில் நின்றுகொண்டிருந்த வேளையில் காரொன்று கட்டுப்பாட்டை இழந்து, இவர்களை மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் ஏ.சி.எப். அஸ்மியா (34) அவரது 06 வயது மற்றும் 12 வயது இரு பெண்பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொரு ஆண் பிள்ளை (11) கடுங்காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் தாயும், இரு பெண் பிள்ளைகள் பலி-Accident at Pottuvil Mother-2 Child Dead

(அம்பாறை சுழற்சி திருபர் - ரி.கே. ரஹ்மதுல்லாஹ்)

 


Add new comment

Or log in with...