Home » O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

by Prashahini
December 1, 2023 8:39 am 0 comment

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (30) இரவு வெளியாகியுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முடிவுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சை 536 இணைப்பு மத்திய நிலையங்கள் ஊடாக 3,568 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றதோடு, இப்பரீட்சை க்கு 394,450 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 78,103 தனியார் விண்ணப்பதாரர்கள் உள்ளிட்ட 472,553 பேர் தோற்றியிருந்தனர்.

அனைத்து அதிபர்களும் அந்தந்த பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய, http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று, School Account Login ஊடாக ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட பெறுபேறுகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும், வலயப் பணிப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, http://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி, Exam Result Sheet  ஊடாக தங்கள் மாகாணம்/வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய/பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சகல பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும்  http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் Personal Account Login ஊடாக பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய/பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மீளாய்வு பெறுபேறுகள் வெளியான பின்னர், அந்தந்தப் பாடசாலைகளின் பெறுபேறு ஆவணங்கள் அந்தந்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உள்நாட்டு, சர்வதேச பயன்பாட்டிற்காக இப்பரீட்சைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக டிசம்பர் ஆம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க, டிசம்பர் 04 முதல் 18 வரை http://onlineexams.gov.lk/eic இணைப்பு மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:

  • துரித இலக்கம் – 1911
  • பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும்பெறுபேறுகள் கிளை – 0112784208/ 0112786616/ 0112784537/ 0112785922
  • பாடசாலை பரீட்சை மதிப்பீட்டு கிளை – 0112785231/ 0112785216/ 0112784037
  • தொலைநகல் – 0112784422

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT