Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் தோல்வி | தினகரன்

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் தோல்வி

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் தோல்வி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

 

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் 2018 தொடரின் நேற்று (23) இடம்பெற்ற சுப்பர் 4 சுற்று போட்டிகளில் ஒரு போட்டியில் இந்தியா அணி இலகு வெற்றியும், மற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றியையும் பெற்றன.

துபாயில் இடம்பெற்ற, சுப்பர் 4 போட்டியின் 3 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, இந்திய அணியின் திறமையான பந்து வீச்சினால் 237 ஓட்டம்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அணி ரோஹித், தவான் ஆகியோரின் சதங்களினால் 63 பந்துகள் மீதமிக்க, 9 விக்கெட்டுகளால் மிகப்பாரிய வெற்றி பெற்றது.

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

ரோஹித் சர்மா 119 பந்துகளில் 7  நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்களுடன் 111 ஓட்டங்களையும், ஷிகர் தவண் 16 நான்கு ஓட்டங்கள் 2  ஆறு ஓட்டங்களுடன் 100 பந்துகளில் 114 ஓட்டங்களையும் எடுத்து 210 ஓட்டங்கள் கூட்டணி அமைக்க 39.3 ஒவர்களில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது இந்திய அணி.

அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகளும் சுவாரஸ்யமின்றி நிறைவடைந்துள்ளது.

ஆயினும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மீண்டும் மோதும் வாய்ப்பு உருவாகலாம் எனும் நிலையில் அப்போட்டியும் இவ்வாறு சுவராஷ்யமின்றி அமையுமா என்பது கேள்விக்குறியாகிள்ளது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய, பாகிஸ்தான் அணி சார்பில், பகர் ஷமான், 31 ஓட்டங்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில், LBW முறையில் ஆட்டமிழந்தார். பந்து கையுறையில்  பட்டு சென்றதை அறியாத அவர் மேன்முறையீடு (Review) செய்யாமல் சென்றார்.

அதனைத் தொடர்ந்து இமாம் உல் ஹக், பாபர் அஸாம் ஆட்டமிழக்க, 58/3 என்ற நிலையிலிருந்து, சுஹைப் மலீக், சர்பராஸ் கூட்டணி சிறப்பாக ஆடி 23 ஓவர்களில் 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

சுஹைப் மலீக் அபாரமாக விளையாடி 78 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் 44 ஓட்டங்களையும் ஆசிப் அலி 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், பும்ரா 6 ஓவர்களில் 1 ஓட்டமற்ற ஓவருடன் 13 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

சாஹல், யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

238 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 39.9 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 114 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ரோஹித் சர்மா தனது 19 ஆவது சதத்தையும், ஷிகர் தவான் தனது 15 ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்தனர்.

இருவரும் இணைந்து 210 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

16 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 114 ஓட்டம்கள் எடுத்திருந்த தவான் ரன் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா தனது 19 வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ஓட்டங்களை கடந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில், எந்தவொரு வீரரும் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுஹைப் மலிக் 4.3 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களை வழங்கியிருந்தார். அவரது பந்துவீச்சின் போதே தவான் ஆட்டமிழந்தார் என்பதோடு, அவர் போட்டியின் இறுதிப் பகுதியிலேயே பந்துவீச அழைக்கப்பட்டிருந்தமை கிரிக்கெட் விமர்சகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தெரிவானார்.

ஆப்கான் - பங்களாதேஷ்; பரிதாபமாக வெளியேறியது ஆப்கான்

அபுதாபியில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டிகளின் நான்காவது போட்டியில் ஆப்கான் அணி 3 ரன்களால் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.

இறுதி ஒவரில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

அந்த வகையில், ஆசிய கிண்ணத் தொடரில் மிக அபாரமாக விளையாடிய ஆப்கான் அணி தொடரிலிருந்து வெளியேறியபோதும், அவ்வணிக்கு இந்தியாவுடன் மற்றுமொரு போட்டி உள்ளது. 

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cupஅத்துடன் பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியா அணியை எதிர்கொள்ளும்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடி, 250 ஓட்டங்கள் எனும் இலக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணையித்தது.

நஜ்முல், மிதுன் ஆகியோர் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற, 18/2 என இருந்த பங்களாதேஷ் அணி, லிட்டன் தாஸ் 41, முஷ்பிகுர் ரஹிம் 33 ஓட்டங்களை பெற்றதை அடுத்து அவ்வணியை 81 ஓட்டங்களுக்கு நகர்த்தினர்.

அதனையடுத்து, ரஷீத் கானின் பந்துவீச்சில் லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹஸன் ஆகியோர் அதே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து முஸ்பிகுர் ரஹீம் ரன் அவுட் ஆனதைத் தொடர்ந்து பங்களாதேஷ் 87/5 எனும் நிலையை அடைந்தது.

ஆயினும் அனுபவமின்மை காரணமாக ஆப்கானிஸ்தான் அணி, விக்கெட்டுகளை எடுப்பதை  தொடராத நிலையில், பங்களாதேஷ் அணி சுதாரித்தது.

இம்ருல் கைஸ் 72 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்ததோடு, மஹ்முதுல்லாஹ் 74 ஓட்டங்களை பெற்றனர்.

50 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. (249/7)

பந்துவீச்சில் ஆப்கான் அணி சார்பில், அப்தாப் ஆலம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  முஜீபுர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

250 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26/2 என்ற மோசமான தொடக்கத்தை சந்தித்தது. ஷஹீதி, சஷாட் கூட்டணி 63 ஓட்டங்களை கூட்டணியாக பெற்றனர்.

சஷாட் 53 ஓட்டங்களையும்,  ஷஹீதி 99 பந்துகளில் 5 நான்கு ஒட்டங்களுடன் 71 ஓட்டங்கைளையும் பெற்றார்.

ஒரு கட்டத்தில், 192/5 எனும் நிலையில் தடுமாறிய  ஆப்கானிஸ்தான் அணி, 39 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்தது.

மொகமது நபி 38, ஷேன்வாரி 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

மொஹம்மட் நபி மந்தமாகத் தொடங்கி பிறகு 2 நான்கு ஓட்ங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்களை பெற்று, வெற்றி நம்பிக்கையை உயர்த்தினார்.

மொகமது நபி 49 ஆவது ஓவரில் (48.3) ஆட்டமிழந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில், பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் கடைசி ஓவரை வீசினார். ரஷீத் கானை, தானே பிடியெடுத்து ஆட்டமிழக்க வைத்தார். 

Super Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் வெற்றி-INDvPAK-AFGvBAN Super Four-Asi Cup

ஷென்வாரி, குல்பதீன் நயீப் 2 காலில் பட்ட பந்திற்காக 2 ஓட்டங்களை பெற்றனர். கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் முஸ்தபிசுர் வீசிய கடைசிப் பந்தை ஷென்வாரி அடிக்க முயன்றார். அதன்போது அவர் கையிலிருந்த மட்டை நழுவி பறந்தது.

அதனையடுத்து இறுதி வரை போராடிய ஆப்கானிஸ்தான் அணி மிக பரிதாப தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

பங்களாதேஷ் அணி சார்பில் மஷ்ரபி மோர்டஷா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹஸன், மஹ்முதுல்லாஹ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மீண்டும் ஹஸ்மதுல்லாஹ் ஷஹிதியின் அபாரமான 71 ஓட்டங்கள் வீணானதோடு, ஆப்கான் அணி 246/7 என 3 ஓட்டங்களால் வலி நிறைந்த, வேதனையுடன் தோல்வியைத் தழுவியது.

ஆட்ட நாயகனாக மஹ்முதுல்லாஹ் தெரிவானார்.

நாளைய தினம் (25) ஆப்கான் மற்றும் இந்திய அணிகளும், நாளை மறுதினம் (26) பங்களாஷ், பாகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன

இத்தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...