உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை | தினகரன்

உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை

உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை-3.5 Acre Cannabis Cultivation Found at Hambegamuwa at Udawalawe National Park

 

மேலும் 101 கிலோ கஞ்சா செடி மீட்பு; இருவர் கைது

உடவளவை தேசிய பூங்காவின், ஹம்பேகமுவ பகுதியில் சுமார் 3 1/2 ஏக்கர கஞ்சா சேனையை பொலிசார் மீட்டுள்ளனர்.

வலானை மத்திய குற்றத் தடுப்பு தாக்குதல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து குறித்த கஞ்சா சேனை மீட்கப்பட்டுள்ளது.

உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை-3.5 Acre Cannabis Cultivation Found at Hambegamuwa at Udawalawe National Park

உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை-3.5 Acre Cannabis Cultivation Found at Hambegamuwa at Udawalawe National Parkஇதன்போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த, 101 கிலோ கிராம் காய்ந்த கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கஞ்சா சேனையில், ஆளுயர கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளதோடு, சுமார் 2,100 செடிகள் இவ்வாறு செய்கை பண்ணப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் பிடுங்கி அகற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் ஹம்பேகமுவ, தணமல்விலவைச் சேர்ந்த 23 வயது மற்றும் தெவ்ரம்வெஹர, லுணகம்வெஹரவைச்  சேர்ந்த 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை-3.5 Acre Cannabis Cultivation Found at Hambegamuwa at Udawalawe National Park

நேற்று முன்தினம் (21) கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், நேற்றையதினம் (22) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...