பத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி | தினகரன்

பத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

பத்தேகமவில் 37 வயது நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி-Shooting at Baddegama-Hikkaduwa

 

ஹிக்கடுவ, பத்தேகம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 37 வயது நபர் பலியாகியுள்ளார்.

இன்று (23) பிற்பகல், ஹிக்கடுவ தபால் நிலையத்திற்கு அருகில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபர் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர், தெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹிக்கடுவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...