தங்காலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி | தினகரன்

தங்காலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

தங்காலையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Tangalle Shooting 42 Year Old Businessman Dead

 

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், வெலிஆர பிரதேசத்தைச் சேர்ந்த, 42 வயதான வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (23) முற்பகல் 11.00 - 11.30 இடைப்பட்ட நேரத்தில், தங்காலை, வெலிஆர, நெட்டொல்பிட்டிய பகுதியில் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியிலுள்ள, வாகன சேவை மையம் ஒன்றின் உரிமையாளரான வர்த்தகர், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த குறித்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சந்தேகநபர்கள், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் தங்காலை பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சடலம் தற்போது வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...