இடமாற்றம் பெற்று பணியிடம் திரும்பாதோருக்கு சம்பளம் இல்லை | தினகரன்

இடமாற்றம் பெற்று பணியிடம் திரும்பாதோருக்கு சம்பளம் இல்லை

இடமாற்றம் பெற்று பணியிடம் திரும்பாதோருக்கு சம்பளம் இல்லை-Salary Suspended to Docotors and Nurses Not Accept Transfer

 

இடமாற்றம் பெற்று தங்களது பணியிடங்களுக்கு திரும்பாத வைத்தியர்கள் மற்றும் தாதிகளின் சம்பளத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்ட பெரும்பாலானோர், தங்களது புதிய பணியிடங்களுக்கு சமூகமளிப்பதில் தாமதம் நிலவுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இடமாற்றம் வழங்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை அவர்களது உரிய பணியிடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...