இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது | தினகரன்

இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

குடும்ப அரசியலை நான் விரும்பவில்லை

அமெரிக்க குடியுரிமையுள்ள ஒருவருக்கு இந்த நாட்டில் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதும் அமெரிக்க குடியுரிமையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது? நான் ஒருபோதும் குடும்ப அரசியலை விரும்புபவன் அல்ல என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மதுகமவில் வைத்து தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட உள்ளூராட்சி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட குமார வெல்கம எம். பி, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

நான் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ராஜபக்ஷ ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அது மஹிந்த ராஜபக்ஷவாகவே இருக்கவேண்டும். நான் அவரைத் தான் விரும்புகின்றேன். ஏனென்றால் நாட்டு மக்களும் அவரையே விரும்புகின்றார்கள்.

ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்யும் சூழ்ச்சி ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரது வேலை என சிலர் கூறினாலும் அவ்வாறு செய்யக்கூடிய யாரும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியில் இல்லை. இருந்தால் எனக்குத் தெரியாதா? தற்போது எல்லோரும் காற்றுப் போய் உள்ளார்கள். இதுபோன்ற கொலைகளை செய்யமாட்டார்கள் என்றார்.


Add new comment

Or log in with...