பிக்ெபாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு | தினகரன்

பிக்ெபாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

தாடி பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். பிக்ெபாஸ் வீட்டில் இருந்த ஒரே ஆண் போட்டியாளர் தாடி பாலாஜி. விதி யாரை விட்டது என்பதுபோல, அவரையும் வெளியே அனுப்பி பிக்பாஸ் வீட்டை மகளிர் விடுதியாக மாற்றினர். இப்போது இறுதி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது பிக்ெபாஸ். பாலாஜி வெளியேற்றப்பட்டதும் முதல் வேலையாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

ஸ்டாலினை சந்தித்த தாடி பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பிக்ெபாஸ் வீட்டில் இருந்ததனால் கருணாநிதிக்கு இறுதியஞ்சலி செலுத்த செல்லவில்லை. கருணாநிதி மறைவு செய்தியை கேட்டு கண்கலங்கிய பாலாஜி, பிக்ெபாஸ் வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் இறுதி ஊர்வலத்திற்கு சென்றிருப்பேன் எனக் கூறியிருந்தார். அந்த வகையில், தற்போது ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த பிக்ெபாஸ் நிகழ்ச்சியால் யாருக்கு நன்மை நடந்ததோ இல்லையோ, பிரிந்திருந்த பாலாஜியின் குடும்பம் சேர்ந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது.

 


Add new comment

Or log in with...