கண்டி கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு | தினகரன்

கண்டி கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு

கண்டி கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு-Kandy-Riot-Amith-and-7-Others-Further-Remanded-Till-Oct-05th

 

கண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (21) தெல்தெனிய நீதவான் சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன்போது, சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக அறிக்கைகளை, தீவிரவாத தடுப்புப் பிரிவினர், நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

கண்டியில் இடம்பெற்ற இனவாத தாக்குதல்கள், கடை எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கடந்த மார்ச் 08 ஆம் திகதி, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் அமித் வீரசிங்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடைகள், வீடுகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் சுமார் 30 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...