புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு | தினகரன்

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு-Habaraduwa Railway Crossing Accident-2 Month Old Child Dead

இன்று (23) பிற்பகல், ஹபராதுவ, கொக்கல பகுதியில் கார் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் இரு மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஹபராதுவ, உரக் களஞ்சியத்திற்கு அருகிலுள்ள வீதி சமிக்ஞை விளக்கு மூலம் இயங்கும் புகையிரத கடவையின் ஊடாக பயணித்த குறித்த கார், புகையிரதத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு-Habaraduwa Railway Crossing Accident-2 Month Old Child Dead

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்துடனேயே குறித்த கார்  மோதியுள்ளது.

கொக்கலவில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு, வீடு திரும்பும்போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு-Habaraduwa Railway Crossing Accident-2 Month Old Child Dead

காப்புறுதி நிறுவனம் ஒன்றில், நிர்வாக அதிகாரியாக கடமைபுரியும் நபர் ஒருவரும் அவரது மனைவி, மனைவியின் தாய், மற்றும் அவர்களது சிறிய மகன் மற்றும் கைக்குழந்தை ஆகிய ஐவர் பயணித்துள்ளனர்.

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு-Habaraduwa Railway Crossing Accident-2 Month Old Child Dead

குறித்த கார், புகையிரதம் வரும் வேளையில், கடவையை கடக்க முயன்றுள்ளமை அருகிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளதோடு, குறித்த சந்தர்ப்பத்தில் புகையிரத கடவை ஒலியும் இசைக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் புகையிரதத்தில் மோதுண்டு, சுமார் 20 அடி தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதன்போது, காரிலிருந்தோர் வெளியில் வீசப்பட்டதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புகையிரத விபத்தில் 2 மாத கைக்குழந்தை உயிரிழப்பு-Habaraduwa Railway Crossing Accident-2 Month Old Child Dead

விபத்தையடுத்து, குறித்த ஐவரும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சஹஸ்யா அமந்தி எனும் இரு மாத பச்சிளம் குழந்தை,  உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

காயமடைந்த ஏனையோர், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஹபராதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(படங்கள்: நந்தசிறி வெலிகமகே)

Add new comment

Or log in with...