ஐ.நா. கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம் | தினகரன்

ஐ.நா. கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

ஐ.நா. கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்-President left for US to Participate 73rd UNGA Sessions
(வைப்பக படம்)

 

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (22) இரவு அமெரிக்கா பயணமானார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல்: அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான கூட்டத்தொடர் நாளை மறுதினம் (25) ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதேநேரம் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
 


Add new comment

Or log in with...