கிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி | தினகரன்

கிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி

கிரித்தலை குளத்தில் மூழ்கி தந்தை, மகள் பலி-Father And Daughter-Drown-Death

 

கிரித்தலை குளத்தில் மூழ்கி, தந்தையும் அவரது மகளும் பலியாகியுள்ளனர்.

இன்று (21) நண்பகல் அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மினுவங்கொடை, துணுகஹ பிரதேசத்திலிருந்து மின்னேரியா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிரித்தலை குளத்திற்கு நீராடச் சென்ற வேளையில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மினுவங்கொட, துணுகஹவவைச் சேர்ந்த 45 வயதான தந்தையும் அவரது 14 வயது மகளும் நீரில் மூழ்கி, காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து, பொலிசாரும் பிரதேசவாசிகளும் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...