சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம் | தினகரன்

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்-7 SLFP Organizers Sacked From the Post

 

சுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (20) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட ஆசனங்களில் கட்சி தொடர்பில் கூட்டங்களோ, செயற்பாடுகளோ மேற்கொள்ளாமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில்,

  • சுசில் பிரேமஜயந்த - கடுவெல அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன - இரத்தினபுரி அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • அநுர பிரியதரஷன யாபா - கட்டுகம்பொல அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • லக்‌ஷ்மன் யாபா அபேவர்தன - ஹக்மண அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • ரி.பி. ஏக்கநாயக்க - யாப்பகுவ அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • குணரத்ன வீரகோன் கரந்தெனிய அமைப்பாளர் பதவியிலிருந்தும்
  • சந்திம வீரக்கொடி - ஹபராதுவ அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு, ஶ்ரீ.ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த நிலையில் பதவி விலகிய அமைச்சர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...