23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார் | தினகரன்

23 வயதுப்பிரிவு தம்புள்ள அணியில் யாழ். மத்திய கல்லூரி வீரன் சூரியகுமார்

கொக்குவில் குறுப் நிருபர்

இலங்கை சுப்பர் மாகாணங்களுக்கிடையிலான 23 வயதுப் பிரிவுக்குட்பட்ட 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள தம்புள்ள கிரிக்கெட் அணி சார்பாக யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் துடுப்பாட்ட வீரனும், தற்போது சென்றலைட்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரனுமாகிய சூரியகுமார் சுஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ள ஆகிய அணிகளுக்கிடையில் இந்த கிரிக்கெட் தொடர் மற்றும் இருபது - 20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும். இந்த நான்கு அணிகளுக்குமான வீரர்கள் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில், தம்புள்ள அணி சார்பில், 13 ஆவது வீரராக சுஜன் உள்வாங்கப்பட்டுள்ளார். வலது கை துடுப்பாட்டம் மற்றும் வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவரின் சிறப்பான செயற்பாடு, பந்துவீச்சாகும். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தனது மேலதிக கல்விக்காக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணைந்து கல்வி கற்றுவருபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த அணித்தெரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வீரன் ரி.பிரியன் 17 ஆவது வீரராக உள்ளடங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...