ரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர் | தினகரன்

ரோயல் – கேட்வே அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சமர்

ரோயல் கல்லூரி மற்றும் கேட்வே கல்லூரிகள் இணைந்து இன்று சனிக்கிழமையன்று இரண்டாவது கூடைப்பந்தாட்டச்சமரினை எதிர்கொள்கின்றன. தங்களது முதலாவது சமரில் இரு அணிகளும் சேர்ந்து திறமையாக, சந்தோசமாக மற்றும் உற்சாகமாக விளையாடி வெற்றிக் கிண்ணத்தை 46க்கு 43 என்ற அடிப்படையில் ரோயல் கல்லூரி கைப்பற்றியது.

தனித்துவம் வாய்ந்த இச்சமரில் நாட்டிலேயே மிகப் பழமையான, முன்னிலையிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றும் முதன்மையான நிலையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றும் கைகோர்க்கின்றன. அதே சமயத்தில் கேட்வே கல்லூரி மற்றும் கொழும்பு மகளிர் கல்லுரி ஆகியவற்றிற்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சமரும் நடைபெறவிருக்கின்றது.

கூடைப்பந்தாட்டம் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளது. இது வீரர்கள் மத்தியில் கூட்டு முயற்சி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டாக அமைகிறது. இதனை மனதில் கொண்டு, இடைவெளிகளை குறைப்பதற்கு ஒரு சிறந்த விளையாட்டாகவும், சமூகத்தை ஒன்றாக இணைக்கவும். இலங்கையை ஒரு ஐக்கிய மற்றும் ஆரோக்கியமான நாடாக முன்னெடுத்துச் செல்லவும் உதவும்.

1917 ஆம் ஆண்டில் முதன் முதலில் இலங்கையில் தான் கூடைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1950 கார்த்திகை மாதம் மத்திய வங்கியின் ஆளுநரான ஜனா எக்ஸ்ட்ரினுடன் இணைந்து, இலங்கை கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் கூடைப்பந்தாட்டத்தை மாணவர்களுக்கான விளையாட்டாக ரோயல் கல்லூரி அறிமுகப்படுத்தி இன்றுவரை பல தேசிய கூடைப்பந்தாட்டத் தலைவர்கள், வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உருவாக்கியுள்ளது. குறுகிய 12 ஆண்டுகளுக்குள் ஒரு சிறந்த விளையாட்டு வரலாற்றைக் கொண்ட கேட்வே கல்லூரி, நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மாணவ மாணவிகளை உருவாக்குவதன் மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது.

இரு கல்லூரிகளினதும் இரண்டு முக்கிய பிரமுகர்களின் பெயர்களானது ஒன்றிணைக்கப்பட்டு “அலஸ்- குணசேகர” கோப்பைக்கான வருடாந்த போட்டிச்சமர் இடம்பெற்றுள்ளது. அமரர் ர. இ.டி. அலஸ் ரோயல் கல்லூரியில் தனது முதலாவது ஆசிரியர் சேவையை ஆரம்பித்து 10 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் கொழும்பு டி.எஸ். சேனநாயக கல்லூரி, கேட்வே கல்லூரியின் நிறுவனமும் மற்றும் கல்வி அமைச்சு செயலாளராகவும் பதவி பெற்ற புகழ்பெற்ற கல்வியாளராவார். அமரர் கிறிஸ்டி குணசேகர, ரோயல் கல்லூரியின் நீண்டகால துணை அதிபராக இருந்தார். அவரது நாட்களில் முன்னாள் இலங்கை பாடசாலைகளின் கூடைப்பந்து சங்கத்தின் துணை தலைவராக இருந்து ரோயல் கல்லூரியின் ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகளை மேம்படுத்துவதற்கு இடைவிடாது கடமையாற்றியுள்ளார். ரோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் ஹேசன் மீத்தலாவா 15 வயதிற்குற்பட்ட போட்டியில் இருந்து அவர்களோடு சேர்ந்து விளையாடி வருகின்றார். ரோயல் அணியில் பல வீரர்கள் 20 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் உள்ளனர். மேலும், அணியின் சில வீரர்கள் 18 வயதிற்குட்பட்ட 3 x3 இளைஞர் கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளனர்.

தெற்காசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரோன் பொன்சேகா, கேட்வே கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராக உள்ளார். இவர் 18 வயதிற்குட்பட்ட 3x3 அணிகள் அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவனாக இருந்தார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கேட்வே கல்லூரி அணி 17 வயதிற்குட்பட்ட பிரிவு இறுதிப் போட்டியில் சமநிலை அடைந்தது. மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 x3 கூடைப்பந்தாட்ட, சாம்பியன்ஷிப்பை மிக அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

ரோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட ஆலோசனை சபை மற்றும் மேலாண்மைக் குழு மற்றும் கேட்வே கல்லூரி கூடைப்பந்தாட்ட குழுவும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றன. மேலும் மாணவர்களுடைய ஆளுமை ஆரோக்கியம் மற்றும் சமூகங்களை ஒன்றாக இணைத்துச் செல்லவும் உதவும்.

அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் இந்த சமரின் பிரதான அனுசரணையார்கள் அடிடாஸ் இந்த ஆண்டுக்கான விளையாட்டு உடைகளை வழங்குகின்றது. டிஜிட்டல் பங்குதாரராக பாப்பரே. கொம் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஒப்புக்கொண்டது. ஆசிரி குழும நிறுவனங்கள சுகாதார சம்பந்தமான பொருட்களையும் மற்றும் ஹைப்பரிஃபாக்டர் நிறுவனம் டிஜிட்டல் ஊடாக பங்களிப்பாளராகவும் தமது சேவையை வழங்குவர்.

இன்று எச்எஸ்சி ப்ளுஸ் கூடைப்பந்து விளையாட்டுத்திடல், ஸ்ரீசம்புத்த ஐயந்தி மாவத்தை (பிட்ரிஸ் பார்க், ஹவெலாக் டவுன்) கொழும்பு- 05 ல் மாலை 3.30 மணியளவில் இடம்பெறுகிறது.


Add new comment

Or log in with...