Tuesday, March 19, 2024
Home » காலநிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு பாதிப்பு

by sachintha
December 1, 2023 10:49 am 0 comment

கடுமையான காலநிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் பட்டினி கிடக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 27 மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகள் பட்டினியால் வாடியதாக சிறுவர்களை பாதுகாப்போம் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
அது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 135 வீதம் அதிமாகும். 12 நாடுகளில் பட்டினியால் வாடும் சுமார் 57 மில்லியன் பேரில் பாதி குழந்தைகள் உள்ளனர்.

கனத்த மழை அல்லது கடும் வறட்சி போன்ற அதீத வானிலை மாற்றங்கள் அதற்கு முக்கியக் காரணமாகும்.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க நாடுகளே அதில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவில் பாகிஸ்தானில் சுமார் 2 மில்லியன் பிள்ளைகளுக்குப் போதுமான சத்துணவு இல்லை. கடந்த ஆண்டு அங்கு நேர்ந்த கடுமையான வெள்ளம் அதற்கு முக்கியக் காரணமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT