தன் வீட்டிலிருந்து தன்னை அடித்து துரத்துவதாக நடிகர் விஜயகுமார் மீது அவருடைய மகள் வனிதா புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் உள்ளது. இந்த வீட்டின் ஒருபகுதியை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னும் அவர் வீட்டை காலி செய்யவில்லை. மாறாக அது தன்னுடைய வீடு என்று உரிமை கொண்டாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனிதாவிடமிருந்து வீட்டை மீட்டுத் தரும்படி மதுரவாயல் காவல்நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட பொலிஸார், வனிதாவை விசாரணைக்காக நேரில் வரும்படி அழைத்திருந்தனர். அதன்படி வனிதா வியாழக்கிழமை காலை மதுரவாயல் காவல்நிலையம் சென்றார். புகார் குறித்து பொலிஸார் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “நான் இந்த வீட்டை விட்டு எங்கே போவேன்? நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. என் வீட்டில் தான் என்னுடைய மருந்துகள் உள்ளன. எனக்கும் வயதாகிவிட்டது. அடித்து என் சொந்த வீட்டிலிருந்தே வெளியே துரத்துகின்றனர். நடிகரென்றால் செல்வாக்கை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் வீட்டிலிருந்து வெளியே துரத்தலாமா?” என தெரிவித்தார்.
Add new comment