இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து | தினகரன்

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பை இந்திய மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

''இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சை மீண்டும் துவக்க வேண்டும்'' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் காஷ்மீரில் 3 பொலிஸாரை கடத்தி சென்று பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரு சம்பவங்கள் நடந்துள்ளன. காஷ்மீரில் 3 பொலிஸாரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஸ்டாம்பை அந்நாடு வெளியிட்டது என்றார்.


Add new comment

Or log in with...