கிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை | தினகரன்

கிரேக்கத்தில் தோன்றிய இராட்சத சிலந்தி வலை

மேற்கு கிரேக்கத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமான அய்டோலிகோ நகரில் 1000 அடி நீண்ட இராட்சத சிலந்தி வலை தோன்றியுள்ளது.

செடி கொடிகள் இருக்கும் பசுமையான பரந்த பகுதி சிலந்தி வலையால் மூடப்பட்டிருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரவோடு இரவாக இந்த இராட்ச சிலந்தி வலை தோன்றி இருப்பது உள்ளூர் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெட்ரக்னாதா என்ற சிலந்திகளே இந்த நூதனமான சிலந்தி வலையை பின்னியிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சிலந்திகள் இனச்சேர்க்கைக்காக இராட்சத சிலந்தி வலைகளை பின்னுகின்றன.

இங்கு நுளம்புகளின் தொகை அதிகரித்திருப்பதும் சிலந்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. “அதிக வெப்பநிலை, போதிய ஈரப்பதம் மற்றும் உணவு உற்பத்தியாகும் பொருத்தமான இடம் இந்த வகை சிலந்திகள் பெரும் எண்ணிக்கையில் தோன்றக் காரணமாகும்” என்று கிரேக்கத்தின் டெமொக்ரிடஸ் பல்கலைக்கழக மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபியல் பேராசிரியர் மரியா சட்சாக்கி குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...