Friday, March 29, 2024
Home » பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அழிக்கப்படும்

பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அழிக்கப்படும்

by sachintha
November 30, 2023 9:12 pm 0 comment

இந்த வாரம் முதல் அதிக காலம் பயன்படுத்தப்படாத கூகுல் கணக்குகள் அழிக்கப்படவுள்ளன.
டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால் பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அழிக்கப்படாமல் இருக்க அவற்றைப் பயன்படுத்துமாறு பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அழிக்கப்படும் என்று அந்நிறுவனம் இவ்வாண்டு மே மாதம் அறிவித்தது. டிசம்பர் மாதம் முதல் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூகுள் தெரிவித்தது.

அதன்படி ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் மட்டுமின்றி யூடியூப், கூகுள் போட்டோஸ், கூகுள் மீட், காலெண்டர் ஆகியவற்றின் பயன்படுத்தப்படாத கணக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் பதிவுகளும் அழிக்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT