கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா | தினகரன்

கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா

கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் 90வது குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்த விளையாட்டு விழா கடந்த 16ம் திகதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது

கிரிக்கெட் போட்டி, ரக்பி போட்டி, கால்பந்தாட்ட போட்டி, 90 வது குழு மற்றும் பழைய மாணவர்கள் இடையிலான உதைபந்தாடட போட்டி, கல்லூரி மாணவர்களின் கராட்டி போட்டி மற்றும் குழந்தைகளுக்கான வேடிக்கை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிரிக்கெட் போட்டியில் 93 வது குழு பழைய மாணவர்கள் அணியும் உதைபந்தாட்ட போட்டியில் சாஹிரா வெட்ரன்ஸ் மற்றும் றக்பி போட்டியில் ஸ்டோப்பியங்ஸ் ஆகிய அணிகளும் வெற்றிபெற்றனர்.

வெற்றிபெற்றவர்களுக்கு பிரதான அனுசரணையாளர்கள் எம். எச். இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் பிரதிநிதி எம். டி. எம். மில்ஹான், கோசோனிக் லங்கா பிரைவேட் லிமிட்டட் மொஹமட் கியாஸ், மற்றும் ஜெனியஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சிரேஷ்ட முகாமையாளர் எச்.டி .ஆர். ஜனக ஆகியோர் வெற்றிபெற்ற அணிகளுக்கு கிண்ணம், சான்றிதழ்கள் மற்றும் பதங்கங்கள் வழங்கினார்கள்.

பிரதம அதிதி ஹுமன்டெரீயன் ரிலீப் பௌண்டேசன் தலைவர் பெரோஸ் மொஹமட் , கௌரவ அதிதி கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் கே. ரவீந்திரன், கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், 90வது குழு தலைவர் எம். ஆர். ஏ. ரசாக் மற்றும் திட்டத் தலைவர் முகம்மத் மிஹான் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். படங்கள்: ருஸைக் பாரூக்

ருஸைக் பாரூக் -


Add new comment

Or log in with...