மைதான நிகழ்ச்சிகளில் வடமாகாணத்துக்கு 7 பதக்கங்கள் | தினகரன்

மைதான நிகழ்ச்சிகளில் வடமாகாணத்துக்கு 7 பதக்கங்கள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நண்பகல் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் பதினைந்து போட்டி சாதனைகள் நிலை நாட்டப்பட்டன.

எனினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றமைதான நிகழ்ச்சிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 2தங்கம்,4வெள்ளி மற்றும் ஒருவெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

கோலூன்றிப் பாய்தலில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி, நேற்று நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கம்,வெள்ளிப் பதக்கங்களைசுவீகரித்தது.

அந்தக் கல்லூரியைச் சேர்ந்த கே. கேதூஷன், 4.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தைவென்றார். இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு வீரரான எஸ். கபில்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், அடுத்த இலக்காக 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

3.80 மீற்றர் உயரத்திற்குத் தாவிய பிபில தெனிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த அசங்க டில்ஷானுக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.

முன்னதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற 18 வயதுக்குஉட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுஅசத்தியிருந்தனர்.

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா மாணவி சி. ஹெரீனா 1.54 மீற்றர் உயரம் தாவிவெள்ளிப் பதக்கத்தைசுவீகரித்தார்.

மிதுனுக்கு 2ஆவது பதக்கம்

16 வயதுக்குட்பட்டஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குகொண்ட ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ்,53.79 மீற்றர் தூரத்தை எறிந்துமுன்னையபோட்டி சாதனையை முறியடித்துவெள்ளிப் பதக்கம் வென்றார்.

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலைமட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றுவருகின்ற மிதுன்ராஜ்,மைதான நிகழ்ச்சிகளான குண்டு போடுதல்,பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.

இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 16 வயதுக்குஉட்பட்டஆண்களுக்கானகுண்டுபோடுதல் போட்டியில் 14.55 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தினைவென்றார்.

நேற்றுகாலை நடைபெற்ற பரிதிவட்டம் எறிதல் போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் சிறந்த தூரங்களைப் பதிவு செய்து முன்னிலை பெற்ற மிதுன் ராஜுக்கு,கைவிரலில் ஏற்பட்டுள்ளகாயத்தினால் இறுதிசுற்றுக்களில் எதிர்பார்த்தளவுதிறமையைவெளிப்படுத்தமுடியாமல் போனது. இதன்படி, 53.79மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அவர், இம்முறைசிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது 2ஆவது பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், கடந்தவருடம் நடைபெற்றசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குபற்றியிருந்த மிதுன்ராஜ், 53.23மீற்றர் தூரத்தை எறிந்துதங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் மிதுன்ராஜுக்கு அண்மைக்காலமாக பலத்தபோட்டியைக் கொடுத்துவருகின்ற பம்பலப்பிட்டி புனித பேதுருகல்லூரி மாணவன் ருமேஷ தரங்க 61.67மீற்றர் தூரத்தைஎறிந்துபுதியபோட்டிசாதனையுடன் தங்கப் பதக்கத்தைவென்றார்.

முன்னதாக கடந்த வருடம் பம்பலப்பிட்டி புனிதபேது ருகல்லூரியைச் சேர்ந்தஅகலங்கவிஜேசூரிய, 52.48மீற்றர் தூரத்தை எறிந்துநிலை நாட்டிய சாதனையை ருமேஷ் தரங்க முறிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரவிந்தன் அபாரம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த சி.அரவிந்தன்,குறித்தபோட்டியைஒருநிமிடமும் 55.65 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆனால் நேற்று நடைபெற்றபோட்டியில் அவருடைய சிறந்தகாலத்தை பதிவுசெய்யமுடியாமல் போனது.

கடந்தமேமாதம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றரில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அரவிந்தன்,ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பதுளை சரஸ்வதி தேசியகல்லூரி கல்விபயின்று வருகின்ற அரவிந்தன்,2015ஆம் ஆண்டுமுதல் அகில இலங்கைபாடசாலை விளையாட்டு விழா,கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்தபோட்டியில் பம்பலப்பிட்டியபுனிதபேதுருகல்லூரியின் இசுரு லக்ஷான் (ஒரு நிமி. 55.65 செக்.) தங்கப்பதக்கத்தையும்,கண்டி,புனிதசில்வெஸ்டர் கல்லூரியின் எல். ஜயதிஸ்ஸ (ஒருநிமி. 57.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றிகொண்டனர்.

12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ளசேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றுமுன்தினம் (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறைபோட்டிகளில் நாடாளவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

16, 18 மற்றும் 20ஆகியவயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில்15 வயதுக்குஉட்பட்டபெண்களுக்கான ஈட்டிஎறிதலில் இரத்தினபுரி சுமனாமகளிர் கல்லூரி மாணவி எல். ஹபுஆராச்சி (37.91 மீற்றர்), 16 வயதுக்குஉட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பம்பலப்பிட்டி புனித பேதுருகல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன் (7.19 மீற்றர்), பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா (6 நிமிடம் 37.9 செக்.) ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று நண்பகல் வரை போட்டிகளின் முடிவில் 12 போட்டி சாதகைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேகநடைப் போட்டியில் மாகந்துரமத்தியகல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), 18 வயதுக்குட்பட்டபெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்திமாரிஸ்டெல்லா (9 நிமி. 58.3 செக்.), 20 வயதுக்கு உட்பட்டஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பசிந்துகொடிகார (52.69 செக்.), 16 வயதுக்குட்பட்டபெண்களுக்கானகுண்டுபோடுதல் போட்டியில் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர (13.15 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கானஉயரம் பாய்தல் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் செனிரு அமரசிங்க (2.10 மீற்றர்),16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பம்பலப்பிட்டிய புனித பேதுருகல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க(61.67மீற்றர்), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்தரமேஷ; மல்ஷான் (21.92 செக்.), 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த டில்ஷாகுமாரசிங்க (2நிமி. 12.67 செக்.),மற்றும் 16 வயதுக்குஉட்பட்டஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாதம்பேடி.எஸ் சேனாநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லஹிருஅவிஷ்க குருசிங்க (ஒருநிமி. 59..02 செக்.),ஆகிய வீரர்கள் புதியபோட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க,நேற்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டபெண்களுக்கான 4+100 அஞ்சலோட்டத்தில் பென்தொட்டகாமினிதேசியகல்லூரி, 18 வயதுக்குஉட்பட்டஆண்களுக்கான 4+100 அஞ்சலோட்டத்தில் கொழும்புறோயல் கல்லூரி மற்றும் 20 வயதுக்கு உட்பட்டஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி அணியும் புதியபோட்டி சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...