மட்டக்களப்பில் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு | தினகரன்

மட்டக்களப்பில் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சமர்களில் ஒன்றான பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை 19ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் மாபொரும் நிகழ்வு ஒன்றினை மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போட்டியானது கடந்த காலங்களில் நகரின் இதர வசதி குறைந்த மைதானங்களில் தான் இடம்பெற்று வந்தது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் கடந்த 25 வருடங்களின் பின்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை 22 ம் திகதி இடம்பெறவுள்ள இப் பாடுமீன் சமர் கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் மட்டக்களப்பு வின்செனட் மற்றும் சிசீலியா பெண்கள் பாடசாலையின் இருஅணி வீராங்கனைகளும் பாண்டு வாத்திய அணியினரால் பாடசாலைகளிலிருந்து நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு காட்சிப்படுத்தப்பட்ட வெற்றிக் கிண்ணத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் ஏ.லவக்குமார் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...