முடிவுகள் வெளியாகி ஒரு வருடத்தில் ரத்து செய்ய முயற்சி | தினகரன்

முடிவுகள் வெளியாகி ஒரு வருடத்தில் ரத்து செய்ய முயற்சி

சிங்களவர் சித்தியடையாததால் திட்டம்

அரச நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானோர் சிங்களவர்கள் இல்லையென்பதால் இப் பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றதென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இந்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...