Friday, September 21, 2018 - 06:00
மும்பையில் இருந்து நேற்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்க தவறியதன் காரணமாக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த 166 பேரில் 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் இரத்தம் கசிந்ததால் விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
Add new comment