அமெரிக்காவுக்கு சீனா பதிலடி | தினகரன்

அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. டிரம்புக்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் அடக்கம்.

அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயல்வதற்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.


Add new comment

Or log in with...