மியன்மார் மீது ஐ.சி.சி ஆரம்பக்கட்ட விசாரணை | தினகரன்

மியன்மார் மீது ஐ.சி.சி ஆரம்பக்கட்ட விசாரணை

மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 700,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயரக் காரணமான மியன்மார் இராணுவ நடவடிக்கை மீது முழுமையான விசாரணைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனப்படுகொலைகள் தொடர்பில் மியன்மார் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மீது விசாரணை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா அறிக்கை ஒன்றை மியன்மார் கடந்த மாதம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில் நிலைமை குறித்து முழுமையான ஆரம்பக் கட்ட விசாரணையை முன்னெடுக்க தாம் தீர்மானித்திருப்பதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் பதூ பென்செளதா கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...