நூறு பெண்களை கற்பழித்த மருத்துவர் காதலியுடன் கைது | தினகரன்

நூறு பெண்களை கற்பழித்த மருத்துவர் காதலியுடன் கைது

அமெரிக்காவில் பல நூறு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் மற்றும் அவரின் காதலி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 38 வயது மருத்துவரான கிராண்ட் வில்லியம் மற்றும் அவரது 31 வயது காதலியான செரிசா லோரா இருவரும் 2016இல் மதுபான விடுது மற்றும் உணவகம் ஒன்றில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் இவர்களின் கைபேசிகளில் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்கள் இருப்பதாக அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோக்களில் இருப்பவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் அமெரிக்காவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வில்லியமுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது காதலி லோராவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...