விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் | தினகரன்

விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்திற்கான ரூ.52 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான அபிவிருத்திப் பணிகள் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வு திங்கட்கிழமைமாலை (17) கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டி.சுரேந்திரன் தலைமையில் விநாயகபுரம் சிவனாலய பிரதம குரு சிவஸ்ரீ கோ.யுதர்சன்சர்மா மற்றும் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகரசர்மா ஆகியோரின் பூஜை வழிபாடுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்திற்கு விஷேட கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மைதானத்திற்கான சுற்றுமதிலுக்கு 27இலட்சமும், விளையாட்டுக்கழகத்திற்கான களஞ்சிய அறை அமைப்புக்காக 15இலட்சமும் மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கான கொட்டகைகள் கொள்வனவு செய்வதற்காக ரூ.10 இலட்சமுமாக மொத்தம் ரூ.52 இலட்சம் நிதி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் அவரினால் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்களான கே.காந்தரூபன், வி.ஜெயச்சந்திரன், எஸ்.சதீஷ்குமார் ,தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதித் தலைவர் ஏ.கலாநேசன் மற்றும் விளையாட்டுக கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டு இருந்தனர்.

திருக்கோவில் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...