மட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம் | தினகரன்

மட்டக்களப்பில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடல் வலுவூட்டல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு மட்டக்களப்பு கோப் சிற்றி மண்டபத்தில் செவ்வாய்கிழமை (18ஆம் திகதி) மாலை இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் இலங்கை உடல் வலுவூட்டல் சங்கத்தின் தலைவர் கித்சிறி பெர்ணான்டோ, முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகரசபை உறுப்பினர்களான வி.பூபாலராஜா, து.மதன், பு.ரூபராஜ், கே.றொனி பிரின்ஸன், அம்பாறை மாவட்ட உடல் வலுவூட்டல் சங்கத்தின் தலைவர் சம்பத், விளையாட்டு உத்தியோகத்தர்களான பிரசாத், அனுசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மேற்படி சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது

அதன் படி மேற்படி சங்கத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், செயலாளராக எம்.லிசோத்மன், பொருளாளராக எம்.துதீஸ்வரன், உபதலைவர்களாக எ.ராஜ்குமார் மற்றும் கே.நிகொல் நிசாந்தன், உபசெயலாளராக எஸ்.நிரோசன், உபபொருளாளராக என்.வினோதரன், போட்டிகளுக்கான செயலாளராக மாநகரசபை உறுப்பினர் கே.றொனி பிரின்ஸன், நிர்வாக உறுப்பினர்களாக எ.அர்ஜுன், டி.இந்துஜன், எ.நிதிசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் சங்கத்திற்கு ஆலோசகர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், இலங்கை வலுவூட்டல் சங்கத்தின் தலைவர் கித்சிறி பெர்ணான்டோ மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் ஆகியோர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...