30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சிவராஜ்,ஹேமபிரியாவும் முதலிடம் | தினகரன்

30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சிவராஜ்,ஹேமபிரியாவும் முதலிடம்

30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தை ஆண்களுக்கான போட்டியில் நுவரெலியாவைச் சேர்ந்த சிவராஜும், பெண்களுக்கான பிரிவில் வவுனியாவைச் சேர்ந்த ஹேமபிரியாவும் பெற்றார்கள்.

30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மரதன் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை நுவரெலியா மாவட்டத்தின் எம். சிவராஜ் (2:41:44) பெற்றுக் கொண்டதுடன், பெண்கள் பிரவில் முதலாமிடத்தை வவுனியா மாவட்டத்தின் எஸ். ஹேமபிரியா (1:33:22) பெற்றுக்கொண்டார்.

இளைஞர் விவகார திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த 30வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி கடந்த 16ம் திகதி மாத்தளை சனத் ஜயசூரிய மைதானத்துக்கருகில் ஆரம்பமாகியது.

அதே இடத்தில் நிறைவடைந்த மொத்த தூரம் 42.195 கிலோ மீற்றராகும். ஆண்கள் மரதன் போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை முறையே திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எச். ஜீ. அஜித் குமார (2:48:25) மற்றும் களுத்துறை மாவட்ட ருவன்மினி லஸித (2:57:02) பெற்றுக் கொண்டார்கள். 21:0975 மீற்றர் தூரத்திலான பெண்கள் அரை மரதன் போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பதுளை மாவட்ட பீ. ஜீ. நிரோஷா (1:34:43) மற்றும் இரத்தினபுரி மாவட்ட ஆர். ஏ. லக்ஸிகா மதுவந்தி (1:36:02) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆண்களுக்கான போட்டியில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 120 பேர் பங்குபற்றியதோடு, பெண்களுக்கான போட்டியில் 31 பேர் கலந்து கொண்டனர். 30வது தேசிய இளைஞர் விளையாட்டுக் போட்டியின் இறுதி தடகளப் போட்டிகள் ஒக்டோபர் 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை மாத்தறை கொடவில மைதானத்தில் நடைபெறும்.


Add new comment

Or log in with...