ஜப்பான் செல்வந்தர் நிலவுக்கு சுற்றுலா | தினகரன்

ஜப்பான் செல்வந்தர் நிலவுக்கு சுற்றுலா

ஜப்பான் நாட்டு செல்வந்தரும், சொசோடவுன் நிறுவனத்தின் நிறுவனருமான யுசாக்கு மஸ்சா நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் தனிப்பட்ட வாடிக்கையாளராக இடம்பெறவுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், அந்தத் தகவலை வெளியிட்டார்.

அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பிக் பல்கோன் ரொக்கெட் உதவியோடு, 42 வயது யுசாக்கு, நிலவைச் சுற்றி வலம் வருவார். அந்த விண்கலத்தின் அனைத்து இருக்கைகளுக்கும் அவர் பணம் செலுத்தியுள்ளார். ஒரு வாரம் நீடிக்கும் அந்தப் பயணத்தில் மற்றவர்களும் தம்முடன் இணைந்துகொள்ளலாம் என்றார் அவர். பயணக் கட்டணம் எவ்வளவு என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

2023ஆம் ஆண்டு யுசாக்குவின் நிலவுப் பயணம் இடம்பெறும். தம்முடன் ஓவியர்களை அழைத்துச்செல்ல அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரின் சொத்து மதிப்பு தற்போது 3 பில்லியன் டொலர். இதற்கு முன்னர், மனிதன் நிலவில் அடியெடுத்து வைத்தது 1972ஆம் ஆண்டில். அப்பல்லோ விண்கலப் பயணத்தின்போது அந்த நிகழ்வு இடம்பெற்றது.


Add new comment

Or log in with...