இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் 2 பலஸ்தீனர் பலி | தினகரன்

இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் 2 பலஸ்தீனர் பலி

காசா எல்லையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் எல்லைவேலிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளை புதைத்துக் கொண்டிருந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு காசாவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து இரு சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தெற்கு காசா பகுதியில் பாதுகாப்பு வேலியை தீவிரவாதிகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் அணுகி பொருள் ஒன்றை வைத்ததை அடுத்து பதில் நடவடிக்கையாக போர் விமானங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தின” என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த திங்கட்கிழமை காசா எல்லையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 26 வயது பலஸ்தீனர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் காசாவை பிரிக்கும்் எல்லைப் பகுதியில் கடந்த மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் நீடித்து வரும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 181 பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...