சிரேஷ்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டம் | தினகரன்

சிரேஷ்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டம்

திருகோணமலை ஒலிம்க்ஸ் விளையாட்டு கழகம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்து சுற்றுப்போட்டியினை கடந்த வாரம் ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் திருகோணமலை, ஐக்கிய இராச்சியம், மன்னார், கிளிநொச்சி, அம்பாறை மாவட்ட அணிகள் பங்கு கொண்டன. எட்டு அணிகள் இச்சுற்றுப்போட்டியில் இரு குழுக்களாக லீக் முறையில் பங்கு கொண்டன.

இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஐக்கிய இராச்சியம் ஒலிம்பிக்ஸ் உதைபந்து கழகத்தை எதிர்த்து, திருகோணமலை நிமால் அணி பங்கு கொண்டது. இரு அணிகளும் தலா ஒரு கோல்களை பெற்றுக் கொண்டதால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன. இதில் ஒலிம்பிக்ஸ் ஐக்கிய இராச்சிய அணி 5 க்கு 3 என்ற கோல் வித்தியாசத்தில் நிமால் அணியினரை வெற்றி கொண்டு சம்பியானகியது.

இச்சுற்றுப்போட்டியில் ஐக்கிய இராச்சியம் ஒலிம்பிக்ஸ் உதைபந்து கழகத்தைச் சேர்ந்த த.திவாகரன் சிறந்த கோல் காப்பாளராகவும், ஜே.டி. ரட்நாயக்கா சிறந்த கோல் செலுத்துனராகவும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட நிமால் அணியின் வீரர் கிசாந்த அயேசேகர சிறந்த விளையாட்டு வீரராகவும் தெரிவு செய்யட்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஒலிம்பிக்ஸ் கழகத்தின் மூத்த வீரர்களான அமரர்கள் அல்பிரட், சண்முகம், பெரோஸ் சயிட், தெய்வேந்திரம் ஆகியோர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சுற்றுப்போட்டிக்கான முழு அனுசரணையை ஐக்கிய இராச்சியம் ஒலிம்பிக்ஸ் உதைபந்து கழகம் வழங்கி இருந்தது.

திருகோணலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் பிரதம அதிதியாகவும். திருகோணமலை நகர சபை உறுப்பினர் க.செல்வராசா, விபுலானந்தா கல்லூரி அதிபர் ஆர்.ஜெரோம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு விருதுகளையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

தம்பலகாமம் நிருபர்


Add new comment

Or log in with...