சாவகச்சேரியில் சுமார் ரூபா 18 இலட்சம் கொள்ளை | தினகரன்

சாவகச்சேரியில் சுமார் ரூபா 18 இலட்சம் கொள்ளை

சாவகச்சேரியில் ரூபா 17 இலட்சம் கொள்ளை-Chavakachcheri Senkadagala Finance Robbery-Rupees 17 Lakhs

 

சாவகச்சேரி நகரத்தில் கண்டி நெடுஞ்சாலையில் (A9) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு சுமார் ரூபா 18 இலட்சம் பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

சாவகச்சேரியில் ரூபா 17 இலட்சம் கொள்ளை-Chavakachcheri Senkadagala Finance Robbery-Rupees 17 Lakhs

இதன்போது முழு முகமும் மூடும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கத்தியோடு உள்நுழைந்து அங்கிருந்த காசாளரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

 


Add new comment

Or log in with...