விவசாயிடமிருந்து ஆகக்கூடியது 5 ஆயிரம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை மூவாயிரம் கிலோகிராம் வரை கொள்வனவு செய்யப்பட்ட நெல் தற்போது 5 ஆயிரம் கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரிப்பது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, நெல் சந்தைப்படுத்தும் சபை விவசாயிகளிடமிருந்து, நெல் (நாடு) ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் சம்பா நெல் 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும். 2018 சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்படும் நெல் தொடர்பாக விவசாய அமைச்சு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. விவசாயிகள் தமது நெல்லை விரைவில் விற்பனை செய்யும் விதத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபை 'பொலிசெக்' உரப்பைகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளது.
Add new comment