சர்டோரா - 2018 உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு | தினகரன்

சர்டோரா - 2018 உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு

கண்டி, தர்மராஜ கல்லூரியின் சாரணர் இயக்கத்தின் 105ஆவது வருட பூர்த்தி மற்றும் கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் 40ஆவது வருட பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு முதல் தடவையாக இந்நாட்டின் சாரணர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டமொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினதும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும் வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தர்மராஜ கல்லூரியின் லேக்விச் பார்க் சர்வதேச சாரணர் நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த செயற்றிட்டம் ”சர்டோரா - 2018” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் அற்கான இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர் மெரில் குணதிலக்க, தர்மராஜ கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் தலைவர் மித்ர மாயாதுன்னே சுமிந்த வித்தானாராச்சி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.


Add new comment

Or log in with...