இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தின் மூலமே நாட்டில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மத்திய மாகாண அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் பள்ளேகலையில் மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் , சிறு வயது முதல் மார்க்கக் கல்வியை கற்பதன் மூலம் நல்லொழுக்கம், ஆத்மீக பண்பு, சகிப்புத்தன்மை. ஐக்கியம் என்பன ஏற்படுகின்றன. இனங்களுக்கிடையிலான காலாசார பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வு என்பன காலத்தின் தேவை. மத்திய மாகாணத்தில் அஹதிய்யா கல்வி மேம்பாட்டுக்கு எனது அமைச்சு மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.
அஹதிய்யா ஆசிரியர்கள் காலாசார பரிமாற்றத்துக்கும் இன ஐக்கியத்துக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்குவது காலத்தின் தேவையாகும் என்றார். இந் நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம் அமீன் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஹேவாஹெட்ட தினகரன் நிருபர்
Add new comment