போதைப்பொருள் தொடர்பில் அறிவிக்க விசேட பிரிவு; இன்று ஆரம்பம் | தினகரன்

போதைப்பொருள் தொடர்பில் அறிவிக்க விசேட பிரிவு; இன்று ஆரம்பம்

போதைப்பொருள் தொடர்பில் அறிவிக்க விசேட பிரிவு; இன்று ஆரம்பம்-Special Unit Formed to Inform about Drugs

 

ஹெரோயின் உள்ளிட்ட விச போதைப்பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்கூடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட செயற்கூடம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (18) முற்பகல் 6.00 மணி முதல், ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பிரிவு, மீண்டும் அறிவிக்கப்படும் வரை, தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, போதைப் பொருள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கங்கள்
011 3024 803
011 3024 815
011 3024 848
011 3024 850

பெக்ஸ் : 011 2 472 757

குறித்த இலக்கங்களுக்கு, எவ்வித இடைஞ்சல்களும் இன்றி பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம் எனவும், இதன்போது அவர்களது தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய, கடந்த மாதம் 19 ஆம் திகதி, மேல் மாகாண வட பிரிவின் களனி, கம்பஹா, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட இடம்பெற்ற 'நேரடியாக சொல்லுங்கள்' (கெலின்ம கியன்ன) எனும் திட்டம் வெற்றியளித்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் கட்டமாக, இன்றைய தினம் (18) இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைபொருளை இந்நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் நடவடிக்கைக்காக, தம்முடன் கைகோக்குமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 


Add new comment

Or log in with...