எரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி | தினகரன்

எரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

புகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன.

புகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகளும் வயிற்றிலிருந்த குட்டியொன்றும் பலியாகியுள்ளன.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

இன்று (18) அதிகாலை கொழும்பு, கொலன்னாவவிலிருந்து மட்டக்களப்பிற்கு, எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, எரிபொருள் தாங்கி ஒன்று பாதையிலிருந்து கீழே வீழ்ந்து புரண்டுள்ளது.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

இந்த யானைகளில் ஒன்று நிறைமாத கருவுற்றிருந்த நிலையில், குறித்த விபத்தை அடுத்து, அக்குட்டி வயிற்றிலிருந்து வெளியே வீசப்பட்டு மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

மற்றைய இரு யானைகளும், பாரிய காயம் காரணமாக, அவ்விடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து காரணமாக, மட்டக்களப்பு நோக்கிய புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

புகையிரத போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும்வகையில், குறித்த புகையிரதத்தை மீண்டும் பாதையுடன் இணைக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

இதேவேளை, வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மரணமடைந்த யானைகளின் உடல்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தை அடுத்து, அதிகாலை வேளையில், பாதையிலிருந்து வீழ்ந்த தாங்கியிலிருந்து எரிபொருளை சேமிக்க பிரதேசவாசிகள் முண்டியடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதோடு, அவ்விடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரின் உதவியை பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

இதேவேளை, இறந்த யானை ஒன்றின் தும்பிக்கையின் நுனிப் பகுதி, யாரோ ஒருவரினால் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பிரதான புகையிரத வீதியில், அடிக்கடி புகையிரத விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு, அது தொடர்பில் குறித்த பகுதியில் மின்சார வேலிகள் மற்றும் பாதை சமிக்ஞைகளும் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

எரிபொருளுடன் சென்ற புகையிரதம் விபத்து; 3 யானைகள் பலி-Train Carrying Fuel Accident-3-Elephants-Died

(படங்கள்: காஞ்சன ஆரியதாஸ)

Add new comment

Or log in with...