யெமனில் வீடொன்றில் வான் தாக்குதல் | தினகரன்

யெமனில் வீடொன்றில் வான் தாக்குதல்

7 பொதுமக்கள் பலி

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை யெமனில் நடத்திய வான் தாக்குதலில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஊடகம் மற்றும் அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

பைதா மாகாணத்தின் ஹுரான் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடொன்றின் மீது நடத்தப்பட்ட இந்த வான் தாக்குதலில் ஆண் ஒருவர், நான்கு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இதில் 11 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இது வேண்டும் என்று நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்று பெயர் குறிப்பிடாத அந்த அகதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் யெமன் தலைநகர் சானா உட்பட நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியதை அடுத்து கடந்த 2014 தொடக்கம் யெமனில் மோதல் நீடித்து வருகிறது.

சவூதி தலைமையிலான கூட்டுப்படை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதிக்கு ஆதரவாக யெமன் யுத்தத்தில் தலையிட்டது.


Add new comment

Or log in with...