புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி | தினகரன்


புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி

புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி-Vavuniya Omanthai Accident-4 Dead-2 Injured

 

- பலியான ஒருவர் சுவீடனில் இருந்து வந்தவர்
- இருவர் படுகாயம்; சாரதி, குழந்தைக்கு பாதிப்பில்லை
- காரில் 08 பேர் பயணித்துள்ளனர்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணமடைந்ததுடன், சாரதி மற்றும் மேலும் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (16) காலை 10.20 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்தவர்களின் விபரம்:
கமலநாதன் சிவரஞ்சனி (30), சுவீடன்.
காண்டீபன் யமுனா ரஞ்சனி (32), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
காண்டீபன் டிசாலினி (13), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
இசை ஞானவதி யோகரத்னம் (56), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.

காயமடைந்தவர்கள்:
ஜேம்ஸ் கமலநாதன் (34), சுவீடன்.
கமலநாதன் ஜெசிகா (06), சுவீடன்.

சாரதி
முத்தையா ரெட்டியார் (53), கிளிநொச்சி (சாரதி)
 

புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி-Vavuniya Omanthai Accident-4 Dead-2 Injured

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்த போது பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

A9 வீதியில் இருந்து ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு செல்வதற்காக, ஆலய வீதி ஊடாக பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நனோ ரக குறித்த கார், கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி-Vavuniya Omanthai Accident-4 Dead-2 Injured

இதன்போது குறித்த காரில் பயணித்த  நான்கு பெண்கள் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் 08 பேர் பயணித்த நிலையில், காரின் முன் ஆசனத்தில் பயணித்த காண்டீபன் தர்ஷிகன் எனும் 07 வயது சிறுவனும் காரின் சாரதியும் காரிலிருந்து பாய்ந்து, எந்தவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி-Vavuniya Omanthai Accident-4 Dead-2 Injured

மரணமடைந்தவர்களில் ஒருவர், காயமடைந்த இருவர் சுவீடனில் இருந்து வந்தவர்கள் என தெரியவருவதுடன், மரணமடைந்த மற்றும் காயமடந்தவர்கள் கிளிநொச்சி, நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி-Vavuniya Omanthai Accident-4 Dead-2 Injured

ஓமந்தை பொலிசார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
 


Add new comment

Or log in with...