வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் | தினகரன்

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்-Vavuniya Long Distance Private Bus Strike

 

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் மூன்று காரணங்களை முன்வைத்து இன்று (18) மதியம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும், இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்-Vavuniya Long Distance Private Bus Strike

குறித்த பகுதியில், வவுனியா போக்குவரத்து பொலிஸ் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகள் தரித்து நிற்பதற்கும் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்-Vavuniya Long Distance Private Bus Strike

தனியார் பேரூந்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி வெளிமாவட்டங்களிலிருந்து மேலதிக பேரூந்துகளை பெற்று சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கந்தன் குணா)

 


Add new comment

Or log in with...