தமிழ் மக்களுக்கு உறவுப்பாலமாக தமிழகம் இருக்கும் | தினகரன்

தமிழ் மக்களுக்கு உறவுப்பாலமாக தமிழகம் இருக்கும்

இலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் மக்களுக்கும் உறவுப் பாலமாக தமிழக அரசு என்றும் இருக்கும் என இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

என்றும் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு மக்கள் சிந்துகின்ற கண்ணீர் துடைக்கப்படும். மக்களுடைய நலன் காக்கப்படும். இலங்கையும் இந்தியாவும் ஒரு சகோதர பாசத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு என்றும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என நான் உறுதியளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...