மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு; அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் | தினகரன்

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு; அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கொழும்பில்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வெகு விரைவில் கொழும்பில் நடத்தப்படுமென மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா நேற்று தினகரனுக்கு தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான நாள் குறிப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை இம்மாதம் கொழும்பில் நடத்துவதற்காக மூன்றாம் வாரத்தில் இரண்டு நாட்கள் குறிக்கப்பட்டிருந்தபோதும் எனது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் காரணமாக அதனை ஒத்திவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனையடுத்து வெகு விரைவில் அப்பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நாட்களை கோரியிருக்கின்றோம். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அதற்கான திகதிகள் எமக்கு கிடைக்குமென நம்புகின்றேன்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...