அரச கம்பனிகள் சம்பளத்தை அதிகரித்தால் தனியார் கம்பனிகளுடன் போராடலாம் | தினகரன்

அரச கம்பனிகள் சம்பளத்தை அதிகரித்தால் தனியார் கம்பனிகளுடன் போராடலாம்

அரச கம்பனிகளான ஜனவசம பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச பெருந்தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை மேற்கொள்ளுமேயானால் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு தனியார் கம்பனிகளுடன் போராட முடியும் என்கின்றார் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான். மலையகத்திலே இயங்குகின்ற பெருந்தோட்டக் கம்பனிகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிர்வகிக்கவில்லை.

அவ்வாறான பிரசாரம் மேற்கொள்வதும் அல்லது சம்பள விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் செல்வதும் அர்த்தமற்றது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் தமது மக்களுக்கு அதிகரித்த, நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே கம்பனிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது என ஊவாமாகாணஅமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைச்சர்கள் வீதியில் இறங்குவதை நாம் விமர்சிக்கவில்லை. விமர்சிக்கவும் கூடாது. எனினும் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற தனியார் கம்பனிகளைப் போன்று அரசாங்கத்தின் கீழான நிறுவனங்களும் இருக்கின்றன. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...