ராஜாவுக்கு நான்கு வாரத்துக்குள் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு | தினகரன்

ராஜாவுக்கு நான்கு வாரத்துக்குள் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்றங்களையும் காவல்துறை குறித்தும் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா அவதூறாகப் பேசினார்.

இது குறித்து நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்குரைஞரின் முறையீட்டை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை தாமாக விசாரிக்க முன் வந்த நீதிபதி சி.டி. செல்வம், எச். ராஜாவை 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...