பா.ஜ.க எம்.பியின் காலை கழுவி தீர்த்தமாக குடித்த தொண்டர் | தினகரன்

பா.ஜ.க எம்.பியின் காலை கழுவி தீர்த்தமாக குடித்த தொண்டர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ.க எம்.பி.யின் காலை தண்ணீரால் கழுவிய அக்கட்சி தொண்டர் ஒருவர், அந்த நீரை தீர்த்தமாக பருகியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தொகுதி பாஜ.க எம்.பி.யாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. இவர் தொகுதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அங்கு வந்த கட்சித் தொண்டர் ஒருவர், நிஷிகாந்த் துபேயின் காலை தண்ணீரால் கழுவி துடைத்தார். பின் அந்த நீரை தீர்த்தமாக குடித்தார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.கவினரின் இந்த செயலுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிஷிகாந்த், ஜார்கண்டில் விருந்தினர்களை கௌரவிப்பதற்காக அவர்கள் கால்களை கழுவது சாதாரணமாக நடப்பது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே சுதாமாவின் காலை கழுவி விட்டுள்ளார் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.கவினரின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. மன்னிப்பு கேட்பதற்கு பதில், இதை நியாயப்படுத்தி பா.ஜ.க எம்.பி பேசி உள்ளார். தன்னை கடவுள் கிருஷ்ணருடன் ஒப்பிட்டும் பேசி உள்ளார். அருவறுக்கத்தக்க செயல்களில் அக்கட்சியினர் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...