அமெரிக்காவில் சூறாவளி பாதித்த பகுதி பேரழிவு இடமாக அறிவிப்பு | தினகரன்

அமெரிக்காவில் சூறாவளி பாதித்த பகுதி பேரழிவு இடமாக அறிவிப்பு

புளோரன்ஸ் சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதுவரை அங்கு சூறாவளிக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

சூறாவளியின் வேகம் வலுவிழந்த நிலையிலும், மேலும் பெரு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

கரோலினாவில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள எட்டு கவுண்டிகளை பேரழிவு பாதித்த இடமாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, சொத்து இழப்பு நிவாரணங்களுக்கான மாணியங்கள் மற்றும் குறைந்த கட்டண கடன்களுக்கான மத்திய நிதி கிடைக்க பெறுகிறது.


Add new comment

Or log in with...